இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொருத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது XBB BA4 எனப்படும் உருமாறிய ஒமிகிரான் பாதிப்பு அதிகளவில் உள்ளது என்றும், தமிழகத்தில் நாளொன்றுக்கு 80 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.