ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளதாகவும், என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கால நிலை அகதிகளாக இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி இந்திராநகரில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், வணிகர் அமைப்புகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய அவர், என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் அழிந்து கொண்டே செல்வதாகவும், 60 ஆண்டு காலமாக என்.எல்.சி நிறுவனம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
என்எல்சி சுரங்கத்தால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த அன்புமணி ராமதாஸ், விவசாயத்தை அழித்து நிலங்களை கையகப்படுத்துவது ஏன் என்றும், என்.எல்.சி தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் எதற்கு நிலம் கையகப்படுத்தபடுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.