தமிழகம் முழுவதும் இன்று முதல் புனித ரமலான் நோன்பு தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு தமிழகத்தில் உள்ள சென்னை , நாகூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
சிறப்பு தொழுகைக்கு பின்னர் இஸ்லாமியர்கள் ஸகர் எனப்படும் நோன்புக்கான உணவை அதிகாலையில் உண்டு நோன்பை துவங்கினர். ஒரு மாத காலம் கடைபிடிக்கப்படும் இந்த நோன்பின் முடிவில் ரமலான் ஈகைத்திருநாள் கொண்டாடப்படும்.