கன்னியாகுமரி அருகே தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு வந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீடியோகாலில் வில்லங்கம் செய்த பாவமன்னிப்பு பாதிரியார் பெனடிக் ஆன்ரோ போலீசாரால் கைது செய்யப்பட்டார். லவ்தீக வாழ்க்கையில் விழுந்ததால், தலைமறைவாகி ஊர் ஊராக ஓடிய பாதிரியார் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் 30 வயதான பெனடிக்ட் ஆன்றோ. குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியாரான இவர் பிலாங்காலை தேவாலயத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் மீது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும், உடலில் மோசமாக தொட்டதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.
இதற்கிடையே பாதிரியார் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
பாதிரியார் பயன்படுத்திய செல்போன் நம்பர் மூலம் நாகர்கோவில் வழியாக பாதிரியார் தப்பிச்செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தடுத்து நிறுத்தி பாதிரியார் பெனடிக் ஆண்றோ வை கைது செய்தனர்.
தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காக வந்த பெண் ஒருவருடன் ஏற்பட்ட நட்பு காதலனதாகவும், லவ்தீக வாழ்க்கையில் விழுந்ததால், பாதிரியர் பணியை கைவிட முடிவு செய்ததாகவும், அந்தப்பெண் வேறு ஒரு இளைஞரை திருமணம் செய்து சென்று விட்டதால் அவர் நினைவாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோ கால் ரெக்கார்டுகளையும் பாதிரியார் அண்டோ தனது லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளார்.
அண்மையில் கல்லூரி மாணவி ஒருவருடன் ஏற்பட்ட காதல் பிரச்சனையில் பாதிரியாரின் லேப்டாப்பை சிலர் பறித்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் தான் பாதிரியாரின் புகைப்படங்கள் மூலம் ‘ல்தகா சைஆ’ சேட்டைகள் சமூக வலைதளங்களில் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்ணியத்தை மறந்து காதலில் விழுந்ததால் பாதிரியார் ஜெயிலில் கண்ணீரோடு கம்பி எண்ணி வருகின்றார்.