2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 3 லட்சத்து 65 ஆயிரத்து 321 கோடியாக உள்ளதாகவும் இது நடப்பு ஆண்டை விட 9.62 சதவீதம் அதிகம் என்றும் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தமிழக அரசுக்கு ஜி.எஸ்.டி, கலால் வரி, வாட் வரி மற்றும் பதிவுத்துறை வரி மூலம் அதிக வருவாய் கிடைப்பதாக கூறிய நிதித்துறை செயலாளர், வரும் நிதியாண்டில் வருவாய் 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நடப்பாண்டில் டாஸ்மாக் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.