தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் முக்கியத் துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விபரத்தை வெளியிட்டார்.
அதில்,கல்வித்துறைக்கு 47 ஆயிரத்து 266 கோடியும், நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு 38 ஆயிரத்து 444 கோடியும், ஊரக வளர்ச்சி துறைக்கு 22 ஆயிரத்து 562 கோடியும், நெடுஞ்சாலைகள் துறைக்கு 19 ஆயிரத்து 465 கோடியும், மக்கள் நல்வாழ்வுக்கு 18 ஆயிரத்து 661 கோடியும், காவல்துறைக்கு 10 ஆயிரத்து 812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளளது.