கோவை வடவள்ளி பகுதியில் செல்லப்பிராணிகள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் 13 செல்லப்பிராணிகள் தீயில் எரிந்து பலியாகின.
வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் நவீன் மற்றும் பாபு ஆகியோர் விற்பனைக்காக 13 செல்லப்பிராணிகளை தனி கூண்டுகள் அமைத்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடந்ததும், கூண்டில் இருந்த செல்லப்பிராணிகள் அனைத்தும் இறந்த நிலையிலும் இருப்பது கண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து சென்றது தெரிய வந்துள்ளது