கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பலர் முன்னிலையில் அடித்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை என்பவர் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தனியார் பேருந்தில் வந்த மாணவி, பேருந்து ஓட்டுநரிடம் பேசியதைக் கண்ட தங்கதுரை பலர் முன்னிலையில் மாணவியை தாக்கியதால், மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தங்கதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.