மதுரையில் சாமி கும்பிடுவது போல் கோயிலுக்குச் சென்ற பெண், அம்மன் கழுத்திலிருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
செல்லூர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள உச்சினி மாகாளியம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை அம்மன் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச்சங்கிலி மாயமாகி இருந்ததை பார்த்து பூசாரி போலீசில் புகாரளித்துள்ளார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வியாழக்கிழமை கோயிலுக்கு சாமி கும்பிடுவதுபோல் வந்த பெண் ஒருவர், பூசாரி பூஜை ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்தி, கருவறைக்குள் சென்று அம்மன் கழுத்திலிருந்த நகையை திருடிக் கொண்டு கோயிலை சுற்றி வருவது போல் பாவனை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தன.