ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
புதுக்காடு, விளாங்குட்டை, கள்ளிமடைகுட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அறுபது ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்த நிலையில், மின்சார கம்பங்களும் விழுந்ததால் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.