முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட மாடத்துடன், 139 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் பழமையான மாடம் புதுப்பிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள 31 ஆயிரம் இருக்கைகளுடன் புதிதாக 5 ஆயிரத்து 300 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாடத்தை திறந்து வைத்த முதலமைச்சர், மைதானத்தையும் பார்வையிட்டார். சி.எஸ்.கே. அணி கேப்டன் தோனி, பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.