வளி மண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான கோடை மழை பெய்யக்கூடும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகமாகவும், உள் மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.