தென்காசியில் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ஆட்டோ ஓட்டுநரான மாதவன் என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அவர் அச்சிறுமியை தென்காசி - இலஞ்சி சாலையிலுள்ள சிற்றாற்று பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்று தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுனர் மாதவன், அந்தோணி ராஜ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமைறைவாக உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷை தேடி வருகின்றனர்.