திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தபுரம் பகுதியில் எருது விடும் விழா நடத்துவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆம்பூர் தீயணைப்பு துறை அலுவலரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பணம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என்று கூறும் அந்த அதிகாரி, தனக்கு முன்பு இருந்த அதிகாரிகள் பணம் வாங்கி பழக்கப்படுத்தி விட்டனர் என்றும் கூறுகிறார்.
“சம்பளம் தான் வாங்குகிறீர்களே, பிறகு எதற்கு லஞ்சம் கேட்கிறீர்கள்” என விழா குழுவினர் கேட்பதற்கு, “எங்கு வேண்டுமானாலும் சென்று புகாரளித்துக் கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்றும் அந்த அதிகாரி அலட்சியமாகக் கூறுகிறார்.