தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நான்கு மாத யானை குட்டியை, கூட்டத்துடன் சேர்க்க முடியாததால், முதுமலை சரணாலயத்தில் வைத்து பொம்மன் - பெள்ளி தம்பதியினர் பராமரிப்பில் வளர்க்க, வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
கடந்த 11-ம் தேதி, கட்டமடுவில் விவசாய கிணற்றில், தவறி விழுந்து மீட்கப்பட்ட யானைக்குட்டியை, சின்னாறு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைக் கூட்டத்துடன், சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர்.
இருப்பினும் கூட்டத்துடன் சேர்க்க முடியாததால், யானை குட்டியை பொம்மனுடன் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கடந்த 5 நாட்களாக யானை குட்டியை பராமரித்த வனத்துறை ஊழியர் அழுதபடி அதனை வழியனுப்பினார்.