மதுக்கடையில் 20 வருடமாக பணிபுரிந்து வரும் தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாதச்சம்பளமாக தருவதால் மற்ற செலவுகளை சமாளிப்பதற்காக, பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக ஊழியர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்..
திருப்பூரில் உள்ள 2312 என்ற எண் உள்ள டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு விற்கப்படும் மதுபானபட்டில்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட 10 ரூபாய் கூடுதலாக ஊழியர் கேட்ட நிலையில் அவரிடம் எதற்காக 10 ரூபாய் எக்ஸ்ட்ரா என்று கேட்ட போது, பீர் குளிர்ச்சியாக கொடுப்பதற்கு என்று சமாளித்தார். அப்படி என்றால் குவார்ட்டருக்கு எதற்கு கூடுதல் என்ற போது கூடுதலாக பெற்ற 10 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.
அத்தோடில்லாமல் தான் 20 வயதில் பணிக்கு சேர்ந்ததாகவும் தற்போது 40 வயதாகும் நிலையிலும் தனக்கு மதம் 10 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் எனக்கூறிய அந்த டாஸ்மாக் ஊழியர், மற்ற செலவினங்களுக்காக ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபய் வாங்குவதாகவும் , தமிழகம் முழுவதும் இப்படித்தான் கூடுதலாக வாங்குகிறோம் என்று தங்கள் ஊதிய பிரச்சனையை பகிர்ந்து கொண்டார்
வழக்கமாக கேள்வி எழுப்பும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக 10 ரூபாய்க்கு மல்லுக்கட்டுவதையும் , கறாராக பேசுவதையும் செய்து வந்த டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் தங்கள் குடும்ப நிலையை சொல்லி 10 ரூபாய் கூடுதலாக வாங்கிய இவரது அப்ரோச் வேற லெவல் என்று இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வட்டமிட்டு வருகின்றது.