கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, டைல்ஸ் வியாபாரி கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவியையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
டைல்ஸ் வியாபாரியான கந்தன், சந்தியா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. வேலை நிமித்தமாக கந்தன் அடிக்கடி வெளியூர் சென்றுவந்த நிலையில், சந்தியாவிற்கு, சிவசக்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேள்விப்பட்ட கந்தன், சிவசக்தி உடனான தொடர்பை துண்டிக்குமாறு சந்தியாவை கண்டித்துள்ளார். இந்நிலையில், வெளியூர் செல்வதாக இருந்த கந்தன் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, அங்கு சிவசக்தியும், சந்தியாவும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த கந்தன், சந்தியாவை அடித்தபோது, இருவரும் சேர்ந்து மிளகாய் பொடியை கந்தன் கண்ணில் தூவி, பின் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.