அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அந்தியூர் கட்சிக் கூட்டத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்காத ஒன்றை தான் தெரிவித்தது போல் கூறப்படுவது வருத்தத்திற்குறியது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகே அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 5வது நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டத்தை செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முகநூலில் வீடியோ வெளியிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இ.பி.எஸ்.க்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.