ஆஸ்கர் விருதை வென்ற 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற யானைகளைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தாயைப் பிரிந்த இரு குட்டி யானைகளுக்கும், அதனை பராமரித்து வந்த தம்பதியினருக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை மையமாக வைத்து, கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம், ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது. இந்த ஆவணப்படம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அந்த யானைகளை காண மக்கள் திரள்கின்றனர்.
யானைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக, முகாமுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.