கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் பிடிக்க சென்ற போது, தன்னை தானே உடலில் கிழித்து கொண்டு, காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசாரை பீர் பாட்டிலால் குத்த விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் செயல்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு இரும்புகளை திருடச் சென்ற ஆசாமியை பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி முத்து தடுத்துள்ளார். அவரை மர்ம ஆசாமி உண்டிகோலால் தாக்கியதில் காயம் அடைந்த காவலாளி முத்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் இரும்பு கொள்ளையில் ஈடுபட்டது அகதிகள் முகாமில் பதுங்கி உள்ள ராபின்சன் என்பது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் சென்ற போது, ராபின்சன் உடைந்த பீர் பாட்டிலால் தன்னைத்தானே உடலில் கிழித்துக்கொண்டு இரத்தம் சொட்ட சொட்ட, பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர் சுரேஷை குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
காவல் உதவி ஆய்வாளருடன் சாதாரண உடையில் சென்ற போலீசார் ராபின் சன்னுக்கு பயந்து போலீஸ் வாகனத்தை சுற்றி ஓடினர்.
ஒருவழியாக ராபின்சன்-ஐ உதவி ஆய்வாளர் மடக்கிப்பிடித்த போது, அவனது கூட்டாளிகள் இரண்டு பேர் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க முயன்றனர்.
போலீசார் பெரும் போரட்டம் நடத்தியும் கொள்ளை வழக்கில் சிக்கிய ராபின் சன்னை பிடிக்க இயலாமல் போனது.