திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே 10ஆம் வகுப்பு மாணவர் கொலை வழக்கில், ஏற்கனவே 3 மாணவர்கள் கைதான நிலையில், தலைமையாசிரியர் உட்பட மேலும் 3 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் மாணவர்கள் குழுவாக சேர்ந்து படிக்கும் போது மாணவர் மவுலீஸ்வரன் சக மாணவர்களுடன் சேர்ந்து கற்களை எறிந்து விளையாடியதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 3 மாணவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் சேர்த்தனர். மேலும் பணியின் போது மாணவர்களின் தகராறை தடுக்காமல் கவனக்குறைவுடன் செயல்பட்டதாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோரை போலீசார் குற்றவாளிகளாக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.