ராமநாதபுரம் அருகே பாம்பு கடிபட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த கிராம மக்கள், அவரை கடித்த பாம்பையும் அடித்து கொன்று மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
நல்லாங்குடியை சேர்ந்த கிருஷ்ணனின் மனைவியான 53 வயதான வள்ளி, வழக்கம் போல் தனது வயலில் கதிர் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது காலில் கடித்து விட்டு 2 அடி நீள கட்டுவீரியன் பாம்பு ஓடியுள்ளது. அவர் சத்தத்தை கேட்டு அங்கிருந்தோர் ஓடிவந்து பாம்பை அடித்து கொன்றனர்.
பின்னர் வள்ளியை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவசர பிரிவில் சேர்த்தனர்.
மேலும் பாம்பு கடி மருந்து சிகிச்சைக்கு மருத்துவர்களிடம் காண்பிக்க பாம்பையும் சாக்குப்பையில் கட்டிக் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.