உதகை நகராட்சி உருது பள்ளியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் ஒரு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 6ம் தேதி பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை, யார் அதிகமாக உட்கொள்வது என்று, போட்டி போட்டுக்கொண்டு, சாக்லேட் சாப்பிடுவது போல, அதிகளவில் உண்ட 8ம் வகுப்பு மாணவிகள் 4 பேருக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஜெய்பா பாத்திமா என்ற மாணவி உயிரிழந்தார்.
இந்நிலையில், கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியர் முகமது அமீன் மற்றும் ஆசிரியை கலைவாணியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், சுகாதாரத்துறை அலுவலர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறும் மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.