நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை சௌகார்பேட்டையில் வடமாநிலத்தவர்கள் பலர் ஒன்று கூடி, ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்ததோடு, உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்களும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதே போல, ராமேஸ்வரத்திலும் ஹோலி கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ராமர் தீர்த்த பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கூடிய வடமாநிலத்தவர்கள், கலர் பொடிகளை தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பண்டிகையை கொண்டாடினர்.
சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி பகுதியிலும், விவசாய தோட்டத்தில் 2வது நாளாக வடமாநிலத்தவர்கள், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.