நாடு முழுவதும் H3 N2 எனும் இன்ஃப்லுயன்சா வைரஸ் பரவி வருவதாகவும், அதன் பாதிப்பு 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும் என்பதால், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், இன்ஃப்லுயன்சா வைரசால் உயிரிழப்பு இல்லை என்றாலும், உடல் வலி, தலை வலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும், தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.