தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கலப்படம் செய்யப்பட்ட பசும்பால் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
பசும்பாலில் கலப்படம் இருப்பதாக வந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரசாயனம் கலந்திருந்த 1500 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, பழைய பேருந்து நிலையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட பாலின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.