வெளிமாநில தொழிலாளர்கள் ஆண்டில் ஒரு மாதம் விடுமுறையில் செல்வது வழக்கம்தான் என்றும் தற்போதும் கூட ஹோலி பண்டிகைக்காக சென்றுள்ளார்கள் என்றும் கூறிய சென்னை உணவகங்கள் சங்கத் தலைவர் ரவி, அவர்கள் உறுதியாக திரும்பி வருவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் டீ கடை முதல் 5 நட்சத்திர விடுதி வரை உள்ள உணவகங்களில் 55 விழுக்காடு வட மாநில தொழிலாளர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று கூறிய அவர், தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களிடம் தமிழக டிஜிபி உள்ளிட்டோர் வெளியிட்ட வீடியோக்களை போட்டுக்காட்டி, வதந்திகளை நம்ப வேண்டாம் என நம்பிக்கை கொடுத்திருப்பதாகவும் கூறினார்.