கன்னியாகுமரியில், பழுக்க வைக்கப்பட்ட செவ்வாழைத்தாரின் ஒரு பாதி சிவப்பு நிறத்திலும், மறுபாதி பச்சை நிறத்திலும் காட்சியளித்ததால் அந்த வாழைப்பழ தார் ஒரே நாளில் பிரபலமடைந்துள்ளது.
குஞ்சாலுவிளை கிராமத்தில் பழக்கடை நடத்தி வரும் ஜெஸ்டின், விற்பனைக்காக வாங்கியிருந்த செவ்வாழைத் தாரை பழுக்க வைத்து எடுத்த போது ஒரே தாரிலுள்ள காய்கள் இரண்டு மாறுபட்ட நிறத்தில் இருந்ததைத் தொடர்ந்து, அந்த வாழைக்குலையை கடையின் முன்பு தொங்க விட்டுள்ளார்.
வித்தியாசமாக காணப்பட்ட இந்த தாரின் முன்பு நின்று ஏராளமானவர்கள் செல்ஃபி எடுத்தும், ஆச்சரியத்துடனும் பார்த்துச் சென்றனர்.