நாகை அருகே பட்டினச்சேரி கடல் பகுதியில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மீண்டும் கசிவு ஏற்பட்டதால் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட நிர்வாகம், கச்சா எண்ணெய் பரவலை தற்காலிகமாக தடுக்க, மணல் மூட்டைகளைக் கொண்டு அடைத்தனர்.
தொடர்ந்து கரையோரமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு, கச்சா எண்ணை கலந்த நீரை அதில் சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் கச்சா எண்ணெய் பரவியுள்ள இடங்களில் OSD எனப்படும் Oil Spill Dispersant ரசாயனத்தை தூவி, அதன் நச்சுத்தன்மையை செயலிழக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு பகலாக பணிகள் நடைபெற்று குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால் மீண்டும் அப்பகுதியில் கசிவு ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து அங்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதால், திருச்சி மண்டல ஐஜி, திருவாரூர் எஸ்.பி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.