திருவண்ணாமலையில் அரசினர் விடுதியில் தங்கியிருந்து கட்டப்பஞ்சாயத்து செய்த போலி ஐஏஎஸ்ஸை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சுபாஷ் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கூறிக் கொண்டு யாத்ரி நிவாஸ் விடுதியில் தங்கி உள்ளார்.
அங்கு, தம்பதியர் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசியதால் சந்தேகமடைந்த ஒருவர் காவல்கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொலைபேசி வழியாக தகவல் அளித்தார்.
அதனடிப்படையில், திருவண்ணாமலை போலீசார், விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தியதில் சுபாஷ் அதிகாரி இல்லையென்பது தெரிய வந்ததும் அவரை கைது செய்தனர்.
தமிழகம், கேரளாவில் அரசு முத்திரைகளை தவறாக பயன்படுத்தியதாக சுபாஷ் மீது வழக்குகள் உள்ள நிலையில் புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநிலங்களின் அடையாள அட்டையையும் போலீசார் சுபாஷிடமிருந்து கைப்பற்றி உள்ளனர்.