ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 74 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன.
இடைத்தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு சித்தோட்டில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அங்குள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதோடு, துணை ராணுவம் உட்பட 500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.