கரூர் அருகே பொது குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான தகராறில் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருக்காம்புலியூரை சேர்ந்த இளங்கோ, பத்மாவதி தம்பதிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் மாநாகராட்சி குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு நிலவியது.
நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, கார்த்திக் வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து பத்மாவதியையும், இளங்கோவையும் வெட்டி விட்டு தப்பிவிட்டார்.
இதில் பத்மாவதி பலியான நிலையில், இளங்கோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய கார்த்திக்கை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.