கோவை, மதுரையைத் தொடர்ந்து சேலம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆர்.டி.ஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மெட்ரோ நிறுவனம், சேலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும் என்றும் திருச்சி, நெல்லையில் மேற்கொள்ளப்படும் பணிகள் மே மாதம் நிறைவடைந்த பிறகு, தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இதனிடையே, கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், மதுரையில் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.