நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை அருகே மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் நுழைவு வாயில் முன்பு இரண்டு சிறுத்தைகள் உலாவந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் புகுந்த சிறுத்தை, நாயை வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில், சிறுத்தைகள் நடமாடும் காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசம்பாவிதம் நடக்கும் முன்பாக சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.