ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பணி குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெத்..'' என்பது போல், தேர்தல் பணி சிறப்பு ஆனால் முடிவு கண்டிப்பாக ஏமாற்றம் தான் என்று கூறினார்.
தொகுதி மக்களுக்கு, எதிர்க்கட்சியினர் இரவு பகல் பாராமல் அள்ளி அள்ளி கொடுக்கின்றனர் என்றும் ஆனால் முடிவு தங்களுக்குச் சாதகமாகத்தான் வரப்போகிறது என்றும் அவர் கூறினார்.