ஈரோடு கிழக்கு தொகுதியில் துணிவு, வாரிசு உள்ளிட்ட படங்களெல்லாம் போட்டுக் காட்டி மக்களை ஓர் இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆடுகளை பட்டியில் அடைப்பதுபோல ஒட்டுமொத்தமாக வாக்காளர்களையும் ஓர் இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்த அவர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.