மதுரை மேலூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மருத்துவ தேர்வுக்கு தயாராகி வந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல், காவல்துறையில் பணியாற்றிய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டார்.
மேலவளவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிவந்த அழகனுக்கும் அவரது மனைவி நாச்சாம்மாளுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன் தமிழ்வாணன் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகன் இறந்த அதிர்ச்சி தாங்காமல் தலைமைக் காவலர் அழகனும் தூக்கிட்டு உயிரிழந்தார். இருவரது உடலையும் கைப்பற்றி மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.