கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில், ராணுவ வீரர் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம், கர்னல் தலைமையிலான 5 பேர் கொண்ட ராணுவ போலீசார் விசாரணை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன், தண்ணீர் தொட்டி முன் துணி துவைத்தது தொடர்பாக, திமுக கவுன்சிலருடன் நடந்த மோதலில், ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எஸ்.பி அந்தஸ்தில் உள்ள கர்னல் தலைமையிலான ராணுவ போலீசார், ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறியதுடன், காயமடைந்த அவரது சகோதரர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர்.