சேலத்தில் ரவுடி கொலை வழக்கில் சரணடைந்த 4 பேரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். காட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன். சந்தை நடத்த டெண்டர் எடுத்து தொழில் நடத்தி வந்தார்.
இது தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி காட்டூர் பகுதியில் நண்பர் ஒருவருடன் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ஆனந்தனின் உறவினர் அன்பழகன் மற்றும் சக்திவேல் அஜித் குமார் ,மணிகண்டன் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து 4 பேரிடமும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.