முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் விளம்பரம் ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து அவர் 12,லட்சத்து 10,740 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் சைபர் க்ரைமில் புகார் அளித்ததை தொடர்ந்து, கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் கைதானார்.
தற்போது திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஓபேத் பால் என்பவர் இவ்வழக்கில கைதாகியுள்ளார்.