சிவகங்கை அருகே அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர்.
சிவகங்கை அருகே சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் மாண்ட்போர்ட் என்ற தனியார் பள்ளியில் பெற்றோர்கள், குழந்தைகள் இடையில் உள்ள பாசம் மற்றும் அன்பினை வெளிப்படுத்தும் வகையிலும், அரசு பொது தேர்வினை எதிர்கொள்ள தேவையான ஊக்கம் கொடுப்பதற்காக பெற்றோர்களுக்கு மாணவ-மாணவிகள் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடை பெற்றது.
பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கால்களை பன்னீரால் சுத்தப்படுதி, பூக்களால் பூஜை செய்தும், சந்தனம் குங்குமம் வைத்து ஆரத்தி எடுத்தும் மரியாதை செய்தனர்.
தாங்கள் தூக்கி வளர்த்த மழலை செல்வங்கள் மாணவ செல்வங்களாகி தங்கள் பாதத்திற்கு பூஜை செய்வதை எண்ணி பூரிப்பில் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
தங்கள் பெற்றோர் அழுவதை கண்டு சில மாணவிகளும் கண்ணீர் வடித்தது அவர்களுக்கிடையேயான உணர்வின் பரிமாற்றமாக அமைந்தது.
பாத பூஜை முடிந்த பின்னர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரவணைத்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.