செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வயது முதிர்ந்த தம்பதியை கொலை செய்து விட்டு, 12 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெம்மேலி பகுதியை சேர்ந்தவர்கள் சகாதேவன் - ஜானகி தம்பதியினர். இவர்களின் ஒரு மகன் செல்வம் சென்னையிலும், மற்றொரு மகன் கோபால், அதே பகுதியில் வேறொரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நேற்றிரவு கோபால் பெற்றோரை பார்க்க வீட்டிற்கு சென்றபோது தந்தை இறந்த நிலையில் இருந்ததாகவும், தாய் வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அவர் இயற்கையாக மரணமடைந்ததாக நினைத்து, தாயை தேடி வந்த நிலையில், இன்று காலை வீட்டின் அருகில் உள்ள முந்திரி தோப்பில் ஜானகி கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது.
விசாரணையில் வீட்டில் இருந்த நகைகள், ஜானகி கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி, தோடு உள்ளிட்டவை திருடு போனதும் தெரிய வந்தது.