ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுகவின் பதினான்கு தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பல்வேறு இடங்களில் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் செயல்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்பு குழுவினரும் புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டதையடுத்து, திமுகவின் பத்து பணிமனைகளுக்கும், அதிமுகவின் நான்கு பணிமனைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.