பட்டா மாறுதல் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பட்டா மாறுதல் கோரி மனு அளித்த 2 மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை திட்டத்தின் கீழ் மனு அளித்தவர்களிடமிருந்து நேரடியாக மனுவை பெற்ற முதலமைச்சர் அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.