திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஒன்பது தனிப்படை அமைத்து 400க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளைக் ஆய்வுசெய்து போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிப்ரவரி 12ம் தேதி அதிகாலையில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமிரா இல்லாத பகுதிகளாக சென்று ராணிப்பேட்டை வழியாக ஆந்திராவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் அரங்கேறி நான்கு நாட்கள் ஆகியும், காவல் துறையினருக்கு வேறேதும் தடயங்கள் கிடைக்கவில்லை என்றும், அதனால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் சவால்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.