ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 12 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி சம்பத்நகர், முனிசிபல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உரையாற்றி வாக்குக் கேட்டார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் எஸ்.கே.சி. சாலை, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்
வைரா பாளையம், பட்டேல் வீதி, நேதாஜி வீதி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டோர் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்ரகாரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் சூரம்பட்டி நான்கு ரோடு, எஸ் கே சி சாலை ஆகிய இடங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருங்கல்பாளையம் பகுதியில் வீடு வீடாகவும் கடைகளிலும் மேளம் அடித்தபடி சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அருள்மொழி வீதி, குந்தவை வீதி, ஆசாத் வீதி, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று ஓட்டுக் கேட்டார்.
ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு வாக்களிக்க கோரி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரித்தார்