செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாணவர்களை தாக்கியதாக வட மாநில தொழிலாளர்களை நையப்புடைத்த சம்பவம்..! ஆர்.வி எஸ்.கல்லூரியில் கலவரம்

Feb 14, 2023 09:47:20 PM

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆர்.வி.எஸ் கல்லூரி கேண்டீனில் கோழிக்கறி கேட்ட மாணவர்களை தாக்கியதாக, வடமாநில ஊழியர்களை டிராக்டருடன் வைத்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவத்தால் கல்லூரி வளாகம் போர்க்களமானது.

கோவை மாவட்டம் சூலூரில் ஆர் வி எஸ் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

திங்கட்கிழமை இரவு இங்குள்ள உணவு விடுதியில் உணவருந்த சென்ற மாணவர்கள் சிலர் கோழிக்கறி கூடுதலாக வழங்குமாறு உணவு பறிமாறிய வடமாநில தொழிலாளர்களிடம் கேட்டுள்ளனர். வழங்க மறுத்ததால் உண்டான வாக்குவாதத்தில் வட மாநில தொழிலாளர்களை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகின்றது .

சம்பவம் நடந்த போது 700க் மேற்பட்ட மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்ததால் , வட மாநில தொழிலாளர்கள் அடி வாங்கிக் கொண்டு மாணவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஓடிச்சென்றவர்கள் கல்லூரியில் பணியாற்றும் மற்ற வட மாநில தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த ஒன்று திரண்டு வந்தவர்கள் மாணவர்களை திருப்பி தாக்கியதால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது..

தாக்குதலை சமாளிக்க முடியாமல் டிராக்டரில் ஏறி தப்பிக்க நினைத்து வசமாக சிக்கிய வட மாநில தொழிலார்களை பிடித்து வைத்து மாணவர்கள் நையப்புடைத்தனர்..

கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை எடுத்து வீசியும், அங்கிருந்த மரங்களை உடைத்தும் தாக்கி கொண்டதால் கல்லூரி வளாகம் போர்க்களமாக மாறியது. இதனை அடுத்து அங்கு வந்த சூலூர் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த மோதல் சம்பவத்தில் 6 மாணவர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் ஆர் வி எஸ் கல்வி குழுமத்தின் குமரன் கோட்டம் கோவிலின் பூசாரியான ஹரிஹரன் என்பவரது மனைவி சுதா என்பவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கலவரம் சூலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement
சாயம் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவில் தீ விபத்து.. ஊழியர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு..
த.வெ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயர கேக்..
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை... சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி செல்லும் மக்கள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்ட அல் அமீன் கைது... போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அல் அமீன் தவெகவில் இருந்து நீக்கம்
உடுமலை அருகே குளத்தில் இருந்து சிறுமி, 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு... சடலமாக கிடந்த நிலையில் போலீசார் விசாரணை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30,000 பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை... ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் என தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
சேலம் - ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து... இரு சக்கர வாகனம் மீது ஸ்கார்பியோ கார் மோதியது
அடைக்கலம் கொடுத்த குடும்பத்துக்கு விஷம் கொடுத்த பூசாரி... வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி... அமைச்சர் மதிவேந்தன் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement