ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் துணி தைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜி பாஸ்கர் தலைமையில் கருங்கல்பாளையத்தில் வாக்கு சேகரித்த அதிமுகவினர் அங்குள்ள ஆலையில் துணி தைத்தனர்.
வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரம், சாந்தன் காடு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.