கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாமி சிலையை திருடி விற்க முயன்ற நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் ராமர். இவர் உலோக சாமி சிலை ஒன்றை விற்க முயற்சிப்பதாக கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்த போலீசார்,அங்கு பதுங்கி இருந்த மேலும் 3 பேரை கைது செய்ததுடன் ,அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஒன்றரை வருடத்திற்கு முன்பு கொடுத்த 2 அடி உயரமுடைய நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவான வேல்முருகனையும் தேடி வருகின்றனர்.