வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாமக பிரமுரை கட்டையால் அடித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சித்தேரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி முன்பாக ரத்த வெள்ளத்தில் கிடந்தார்போலீசார் நடத்திய விசாரணையில், நடந்து முடிந்த வேலூர் மாநகராட்சி தேர்தலில் சீட் கிடைப்பதில் பிரகாஷுக்கும், ராமகிருஷ்ணன் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மாநகராட்சி தேர்தலில் இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் தொடர்ந்து நீடித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக ராமகிருஷ்ணனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்